காதலனுக்காக தந்தையை கொன்ற பாசக்கார மகள்: பொலிசில் பரபரப்பு வாக்குமூலம்!!

1013

7464688-3x2-940x627
கோவையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, மகள் காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் நெகமம் அருகிலுள்ள சொக்கம்புதூரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது-55), விவசாயி. இவருக்கு பிரமிளா (வயது-42) என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் திகதி நாகராஜ் கொலை செய்யப்பட்டார்.

சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவருடைய மகள் மகாலட்சுமி, தனது காதலன் சுதீசுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக சதீசின் நண்பர்கள் கமலக்கண்ணன் (19), கிருஷ்ணகுமார் (20), சசிக்குமார் (20), சந்தோஷ்குமார் (20) ஆகிய 4 பேரை பொலிசார் கைது செய்தனர். இதற்கிடையில் கடந்த 10-ந் திகதி மகாலட்சுமி, தனது காதலன் சதீசுடன் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மகாலட்சுமி, சதீஷ் ஆகியோரை நெகமம் பொலிசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

மகாலட்சுமி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில்: நாங்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் என் அப்பா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், எனது தந்தை நாகராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். அதன்படி சதீஷ் தனது நண்பர்கள் உதவியுடன் நாகராஜை கத்தியால் குத்தி கொலை செய்தார் என கூறியுள்ளார்.