இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதி தங்கம் சென்னையில் மீட்பு!!

447

Buying-Gold-Biscuit-In-Mumbai
இலங்கையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 2.74 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான தங்க பாலங்கள் சென்னையில் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னையில் கிழக்குக்கரை வீதியில் பயணித்த பஸ் ஒன்றில் இருந்தே இந்த தங்கம் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பி.டி.ஐ செய்திசேவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து மீன்பிடிப்படகு மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இந்த தங்கம் பின்னர் சென்னையில் பஸ் ஊடாக கடத்தப்பட்டுள்ளது.இந்த தங்கத்தின் நிறை 8.763 கிலோ கிராமாகும். மொத்த சந்தைப்பெறுமதி 2.74 கோடி இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.