பிரபல நடிகை வீட்டில் கொள்ளை!!

1018

Vijayashanthi

தமிழ், தெலுங்கு பட உலகில் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர், விஜயசாந்தி. பின்னர் அரசியலில் குதித்து எம்.பியாகி சினிமாவுக்கு முழுக்கு போட்டார். தற்போது ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பங்களா வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அரசியல் பணி காரணமாக விஜயசாந்தி வெளியில் சென்று இருந்த போது, அவரது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. மர்ம மனிதர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

கொள்ளையர்கள், வீட்டில் இருந்த விலை உயர்ந்த வைர மோதிரம் மற்றும் தங்க சங்கிலி உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு பல இலட்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து விஜயசாந்தியின் சகோதரர் பஞ்சாரா ஹில்ஸ் பொலிசில் புகார் செய்தார். பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.