பொது இடத்தில் கஞ்சா புகைத்த இளைஞன் விளக்கமறியலில்!!

778

Smoking-ganja

திருகோணமலையில் பொது இடத்தில் கஞ்சா புகைத்த இளைஞன் ஒருவரை இந்த மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா இன்று உத்தரவிட்டுள்ளார்.

கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பிரதேசத்தில் பௌத்த விகாரையொன்று அமைந்துள்ள பகுதியில், கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞனை திருகோணமலை பொலிஸார் நேற்று (18) கைது செய்துள்ளனர்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று (19) ஆஜர்ப்படுத்திய போதே 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.