பாலியல் புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் சிம்பாவேயில் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய வீரர்கள் தங்கியுள்ள மெய்க்லஸ் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அங்கிருந்து வெளியான பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஈடுபட்டுள்ளதை அப்பகுதி துணை பொலிஸ் கமிஷனர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் வீரர்கள் யாரும் இவ்வாறு கைது செய்யப்படவில்லை என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அந்த இந்திய வீரரை அடையாளம் காட்டியதாகவும், அவர் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், ஹோட்டல் வட்டாரங்கள் தெரிவித்தன.






