கோழித் திருடனுக்கு கோப்பி : தெற்கில் இடம்பெற்ற நகைப்புச்சம்பவம்!!

552

warm cup of ciffee

வீடொன்றில் கோழி திருடச்சென்ற து கால் தவறி கிணற்றில் விழுந்த நபர் திருடனென்பதை அறியாது காப்பாற்றிய சம்பவம் தென் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் கோழிகளை திருடி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.

இதனாலேயே அப்பகுதியில் அவர் கோழி திருடனென அனைவராலும் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.குறித்த நபர் சில தினங்களாக திருடுவதை விட்டிருந்த நிலையில், ஒரு நாள் இரவு வேளையில் கோழியொன்றை திருடுவதற்காக வீடொன்றிற்குள் சென்றுள்ளார்.

இதன் போது அவ்வீட்டிலுள்ள நாய் குரைத்துள்ளதையடுத்து பயந்து போன குறித்த நபர் வேகமாக ஓட ஆரம்பித்துள்ளார்.பயந்து ஓடியமையினால் கால் இடரி கிணற்றில் விழுந்துள்ளார்.கிணற்றில் விழுந்த குறித்த நபர் தன்னை காப்பாற்றுமாறு கத்தியுள்ளார்.குறித்த சத்தத்தால் வீட்டிலிருந்த அனைவரும் கிணற்றுப் பகுதிக்கு வந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த நபர் திருடிய கோழியை நீரிற்குள் அமிழ்த்தியதுடன் தான் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது பொலிஸார் துரத்தியதாகவும் அதனாலேயே தான் கிணற்றில் தவறி விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார். குறித்த நபரின் வார்த்தைகளை நம்பிய வீட்டினர் திருடனை வெளியெடுத்துள்ளதோடு மாற்று உடைகளையும் வழங்கி சூடாக பருகுவதற்கு கோப்பியும் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்படி, சில நாட்களுக்குப் பின் தண்ணீரெடுப்பதற்காக கிணற்றிற்கு குறித்த வீட்டுப்பெண் சென்ற போது கோழி மிதந்த வண்ணம் இருந்துள்ளது.அதிர்ச்சியடைந்த குறித்த பெண் தனது கணவனை அழைத்து காண்பித்துள்ளார். குறித்த நபர் கோழியை திருடவே வந்துள்ளாரென்பதை அறிந்து ஆத்திரமடைந்த அவர்கள் குறித்த நபரை தீவிரமாக தேடிவந்துள்ளனர்.எனினும் குறித்த நபரை அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.