மதகுரு என கூறி சிறுநீரக நோயாளிகளை ஏமாற்றிய நபர் கைது!!

464

arrest (1)
அக்குரஸ்ஸ பகுதியில் சிறுநீரக நோயாளிகளிடம் இருந்து பணம் சேகரித்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் அத்துரலிய பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர் தன்னை ஒரு மதகுரு என கூறி, சிறுநீரக நோயாளிகளிடம் தொலைபேசி ஊடாக அழைப்பினை ஏற்படுத்தி சிறுநீரகம் நன்கொடையாக வழங்குவதாக கூறியே இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது போக்குவரத்து செலவுகளுக்காக பத்தாயிரம் ரூபாயை வைப்பிலிடுமாறும், தொலைபேசி ஊடாக தெரிவித்து சிறுநீகரம் தேவையான பலரை ஏமாற்றி பணம் பெற்று வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலும் குறித்த நபருக்கு எதிராக ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபரை மாத்தறை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.