ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடமாட்டேன்: மைத்திரி!!

650

1 (12)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஒருமுறை போட்டியிடவேண்டும் என்று மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விடுத்தவேண்டுகோளை அவர் நிராகரித்துள்ளார். கடந்த வாரம் கட்சியின் கூட்டம் இடம்பெற்றபோது இந்த விருப்பமின்மையை ஜனாதிபதி வெளியிட்டதாக கட்சியின் பேச்சாளர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தாம் 2020 ஆம் ஆண்டுடன் ஜனாதிபதி பதவியை தொடர்வதில்லை என்று முன்னர் தாம் எடுத்த தீர்மானத்தில் மாற்றம் இல்லை என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். எனினும் சிறிசேன, அடுத்த பிரதமர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவே கருதப்படுகிறது .தேசிய அரசாங்கம் வீழ்ச்சியடையும் சந்தர்ப்பத்தில் இதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.