அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கில் திட்டமிட்ட 9 இலங்கை தமிழர்களை தமிழக க்யூ பிரிவு காவல்துறையினர் திருச்செந்தூர் பகுதியில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.
சுற்றுலா வீசாவில் தமிழகம் வந்து அங்கிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லும் நோக்கத்தையே இவர்கள் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 9 பேரும் திருச்செந்தூரில் வீடு ஒன்றில் தங்கியிருந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். குறித்த 9 பேரையும் கைது செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள காவல்துறையினர், மேலதிக தகவல்களை வெளியிடவில்லை என்று தெ ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, நேற்று கன்னியாகுமரி கரைப்பகுதியில் படகு ஒன்று மீட்கப்பட்டமையும் அது அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச்செல்வற்காக தயார்செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.






