“வந்தேறு குடிகளுக்கு வவுனியாவில் வர்த்தக மையமா” : வவுனியாவில் துண்டுப்பிரசுரங்கள்!!

918

Vavuniya Poster

வவுனியாவில் இன்று அதிகாலை தினச்சந்தைப் பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளது.

அதில் வந்தேறு குடிகளுக்கு வவுனியாவில் வர்த்தகமையமா? என்ற தலைப்புடன் பொருளாதாரம் இருந்துவிட்டால் பொருளாதார மையத்தை அமைக்கும் இடத்தை தீர்மானிக்கும் தகுதி உங்களுக்கு உண்டா? உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளதுடன்,

மண்ணின் மைந்தர்கள் என்ற பெயரில் தினச்சந்தைப்பகுதியில் உள்ள கடைகளில் இத்துண்டுப்பிரசுரத்தினை காணமுடிந்துள்ளதாக தினச்சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.