கோர விபத்து : சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி!!

455

bike-accident
யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் புத்தூர் றோட் வேம்பிராய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ரஞ்சா எனப்படும் 35 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றை ஏற்றிச் சென்ற வாகனம் குறித்த நபரை மோதி விட்டுவிபத்துக்குள்ளாகி அருகில் இருந்த வீட்டின் மதிலையும் உடைத்து சென்றுள்ளது.

இந்த விபத்தின் மூலம் பல இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் சேதமாகி உள்ளதுடன் ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.