சிரித்தபடியே மரணமடைந்த கன்னியாஸ்திரி! வைரலாகும் புகைப்படங்கள்!!

649

sis
அர்ஜென்டினாவில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.அர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்சைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி சிசிலியா மரியா (வயது 43).

அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் நடந்துக் கொள்ளும் கன்னியாஸ்திரி சிசிலியாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இருப்பினும் அவர் தன்னுடைய நோய் குறித்து எந்தவித கவலையும் இல்லாமல் தொடர்ந்து இறை ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிசிலியா மரணமடைந்தார்.அவர் இறக்கும் தருவாயில் கூட ‘அனைவரும் அன்பை பகிர்ந்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியவாறே சிரித்தபடியே மரணமடைந்தார். அவரது உதடுகள் பல மணிநேரம் சிரித்தபடியே இருந்தது.கடைசி நேரத்தில் கூட சிரித்தபடியே மரணித்த சிசிலியாவின் புன்னகை புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.