வினுபிரியா தற்கொலை : ஒருவர் கைது : வெளிச்சத்திற்கு வந்தது உண்மை!!

769

Vishnupriya

சேலம் மாவட்டத்தை சேர்ந்த வினுபிரியா தற்கொலை வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி கூறியதாவது, வினுபிரியா தற்கொலை வழக்கில் விசைத்தறி தொழிலாளியான சுரேஷ் என்பவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சுரேஷ் பொலிசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில், தான் வினுபிரயாவை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும். தனது காதலைப் அவர் புறக்கணித்தால், அவரை அவமானப்படுத்தவே புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து வெளியிட்டதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் வினுப்ரியாவின் புகைப்படங்கள் சித்திரித்து வெளியிடப்பட்டது குறித்து புகார் அளித்த போது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படும் பொலிசார் இரு‌வருக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளதாகவும். உரிய விளக்கம் அளிக்கவும் பொலிஸ் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.