
சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கும் வரை ஆனமடுவ நீதிமன்றஅதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் போத்தல்களை விநியோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனமடுவ நீதவான் நீதிபதி ஜனனி.எஸ்.விஜயதுங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
நவகத்தேகம – முல்லேகம பிரதேச வர்த்தக நிலையங்களில் 5 லீற்றர் குடிநீர்போத்தல்களில் கழிவு கலந்துள்ளதாக கூறி சுகாதார பரிசோதகர்களின் பொறுப்பில் குறித்த நீர் போத்தல்கள் எடுக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனைக்கு அமைய குறித்த போத்தல்களில் எணணெய் மற்றும் கிரீஸ் என்பன கலந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்காரணமாக சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கும் வரை குறித்த குடிநீர்போத்தல்கள் விநியோகம் தடைசெய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





