பிரத்தியேக வகுப்பிற்கு செல்வதாக கூறி காட்டிற்கு சென்ற காதல் ஜோடிகள் கைது!!

624

forest-lovers
மேலதிக வகுப்புக்குச் செல்வதாக கூறி காட்டுப் பகுதிக்குச் சென்ற பாடசாலை மாணவ, மாணவியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை பிரதேசத்தில் பிரபலமான பாடசாலை ஒன்றில் இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ, மாணவியர்கள் நால்வரே, கடந்த 26ம் திகதி காட்டுப் பகுதிக்குச் சென்றதாகவும், நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் திரும்பி வராததை அவதானித்த பிரதேசவாசிகள் களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்ற போது மாணவர்கள் இருவர் தப்பிச்சென்று பின்னர் பொலிஸில் சரணடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது ஒருவருக்கு ஒரு லட்சம் அடிப்படையில் பிணை வழங்கி விடுவிக்க களுத்துறை நீதவான் நீதிபதி உதேஸ் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவிகள் இருவரையும் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.