இளம் வயதினரின் கோபத்தினை கையாளும் முறைகள்!!

348

angry-woman
13- 19 வயது வரையிலான காலகட்டத்தை நாம் இளவயது (Teen Age) என்று அழைக்கிறோம். இக்கால கட்டத்தின் போதே உளவியல், ஹார்மோன் உட்பட பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.மேலும் இந்த வயதில் தீய பழக்க வழக்கங்களின் பக்கம் செல்லாமல், சரியாக கடந்து விட்டாலே நாம் வாழ்வில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற கூற்றும் நிலவுகின்றது.

குறிப்பாக இந்த வயதினருக்கு கோபம் அடிக்கடி வரும், உங்களது பெற்றோர்களும் கோபத்தை சமாளிக்க பல்வேறு வழிகளில் முயன்றது உங்களுக்கு நினைவிருக்கிறதா?முதலில் கோபம் எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

பெற்றோர்களின் கவனத்திற்கு

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் கோபம் என்பது காதல் மற்றும் சந்தோஷத்தை போன்ற ஒரு இயற்கை உணர்வு, அதில் தவறு ஒன்றும் இல்லை. அதை சரியான வழியில் வெளிப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் மிக முக்கியமானது.கோபத்தை வெளிப்படுத்தும் சரியான முறை எது என்பதை பெற்றோர் தான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். எனினும், அது நிரந்தர தீர்வல்ல. மேலும் கோபத்தை வெளிப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பெரும்பாலான இளைஞர்கள் கோபம் அவர்களுக்கு வல்லமையும், மரியாதையையும் பெற உதவுகிறது என்று நினைப்பதோடு, அதை ஒரு அதிகார தோரணையாகவே கருதுகிறார்கள். இது ஏனெனில், தங்கள் அக்கா, அண்ணன் கோபப்படுவதை பார்ப்பதால் தான்.உங்கள் தங்கை, தம்பி முன்பு நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்களோ, அப்படித்தான் அவர்களும் வளர்வார்கள். எனவே உங்களை நீங்கள் முதலில் திருத்தி கொள்ளுங்கள்.

கோபம் வரும் போது ஒரு ஆழமான மூச்சு எடுத்து மெதுவாக வெளியே மூச்சு விடச்சொல்லுங்கள்.

1 முதல் 10 வரை இறங்கு வரிசையில் கண்களை மூடி எண்ண சொல்லுங்கள்.

கோபத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னால் அவரை ஒருமுறை யோசிக்க சொல்லுங்கள், சுய கட்டுப்பாட்டிற்காக யோகா செய்ய சொல்லுங்கள்.

அடிக்கடி காலை உணவை தவிர்ப்பதாலும் கோபம் வரும். எனவே அவர்கள் காலை உணவை சாப்பிடுகிறார்களா என்பதை கவனியுங்கள்.