வவுனியா நெடுங்கேணி அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கல்!!

733

 
யாழ் காரைநகர் திரு.திருமதி.சண்முகம் மனோன்மணி ஞாபகார்த்த சற்சங்க அனுசரணையில் சைவமணி சண்முகம் சமூக சிரோன்மணி உமாசிவம் ஏற்பாட்டில் சுஜீவனின் ஒத்துழைப்புடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கரடிப்பிளவு பழம்பாசி நெடுங்கேணியிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலையின் 57 மாணவர்களுக்கான சீருடைத் துணிகள், அறநெறிப் பாடசாலை ஆசிரியை திருமதி.விஜிதாவிடமும்,

தட்சடம்பன் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையின் மாணவர்களுக்கு 60 சீருடைத் துணிகள் ஆசிரியை திருமதி.சுபத்திராவிடமும்,

மாங்குளம் சிவந்தமிழ் அறநெறிப் பாடசாலையில் 60 மாணவர்களுக்கான துணியை திரு.வசீகரனிடமும் சம்மளங்குளம் குருந்ததி வெற்றி விநாயகர் அறநெறிப் பாடசாலையின் 45 மாணவர்களுக்கான துணியை திரு.திருமதி.இந்துடதியிடமும்,

ஒட்டிசுட்டான் சுவநகர் ஆதிகணபதி அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான 60 சீருடைத் துணிகளை திருமதி சந்திரவதனாவிடமும் ஐயன்கன்குளம் அறநெறிப்பாடசாலையின் 85 மாணர்களுக்கான சீருடைத் துணியை திருமதி.சகுந்தலாதேவியிடமும் கையளிக்கப்பட்டது.

1 2 3 4