அவதானம் : 18,055 இடங்களில் டெங்கு சோதனை : 139 பேர் மீது வழக்கு!!

585

Dengu

சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்திய மூன்று நாள் டெங்கு ஒழிப்பு திட்டத்தின் முதல் நாளில் 18,055 இடங்கள் டெங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நேற்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் நாளை வரை இடம்பெறவுள்ளது.

டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் மிகுந்த கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு திட்டத்தில், டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சுற்றாடலை வைத்திருந்த 139 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 853 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களில் டெங்கு தொற்று பரவும் நிலை காணப்படுவதாக டெங்கு ஒழிப்பு பிரிவினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.