சுவிஸ் மாநகர சபை கூட்டத்தில் சேலை அணிந்த முதல் தமிழ்பெண் தர்ஷிகா!!

692

1

சுவிஸின் தூண் மாநகர சபை உறுப்பினரான திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன், பிராத்ஹவுசில் இடம்பெற்ற கூட்டத்தில் சேலை அணிந்த முதல் தமிழ்ப்பெண்ணாக கலந்து கொண்டார்.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட தர்ஷிகா கருத்துத் தெரிவிக்கையில், எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. வாக்களித்த தூண் வாழ் மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை இன்றிலிருந்து செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

சுதந்திரமான வாழ்வுக்கும், சுகாதாரமான வாழ்வுக்கும், கல்வி, பிள்ளைகள் மற்றும் குடும்பம் போன்ற விடயங்களில் கூடுதலாக அழுத்தத்தை கொடுத்து சேவையாற்ற பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.

2