ஊக்க மருந்து சர்ச்சையில் ஜெசி ரைடர் – 6மாத தடை..!

322

raiderநியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெசி ரைடர். சர்ச்சைகளில் சிக்கி கொள்வது அவருக்கு வாடிக்கையான ஒன்றாகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரைடர் மதுபான பாரில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டார். இதுதொடர்பான மோதலில் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். ஆபத்தான நிலைக்கு சென்று அவர் உயிர் பிழைத்து வந்தது ஆச்சரியமே.

இந்த நிலையில் ஜெசி ரைடர் ஊக்க மருந்து பயன்படுத்திய தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் உள்ளூர் போட்டியில் விளையாடியபோது ஊக்க மருந்து பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்தது. உடல் எடையை குறைக்க அவர் ஊக்க மருந்தை உட்கொண்டு இருப்பதாக கூறப்பட்டது.

நியூசிலாந்து விளையாட்டு தீர்ப்பாயம் இதுதொடர்பாக விசாரணை நடத்தியது. இதில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்படி நியூசிலாந்து விளையாட்டு தீர்ப்பாயம் ரைடருக்கு 6 மாதம் தடை விதித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த தடை அமுலுக்கு வந்தது. அக்டோபர் மாதத்தின் அவரது தடை முடிகிறது. அதன்பிறகு அவரால் விளையாட முடியும்.

29 வயதான ரைடர் 18 டெஸ்டில்1269 ரன் எடுத்துள்ளார். சராசரி40.93 ஆகும்.39 ஒருநாள் போட்டியில் 1,100 ரன் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சர்வதேச போட்டியில் விளையாடினார்.