சுவாதி கொலை வழக்கு குற்றவாளி கைது : கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி!!

724

Swathi Murder

சுவாதி கொலை வழக்கில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட மென் பொருள் பொறியாளர் சுவாதியின் வழக்கில் 10 சிறப்பு படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் தடுமாறி வந்தனர். இந்நிலையில் சுவாதியை கொலை செய்ததாக திருநெல்வேலியில் ராம்குமார் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொறியியல் பட்டதாரியான ராம்குமார் செங்கோட்டையை சேர்ந்தவர் என்றும் சென்னைக்கு வேலை தேடி வந்துள்ள இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சூளைமேட்டில் வசித்துவந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

ராம் குமாரை பொலிசார் நெருங்குகிறார்கள் என தெரிந்ததும் அவர் தமது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பாளையன்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ராம் குமாரை அனுமதித்துள்ளனர்.

இதனிடையே நடந்த விசாரணையில் சுவாதியை கொலை செய்துள்ளதை ராம்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.