வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் 56 பேருக்கு சமுதாய சீர்திருத்தக் கட்டளை!!

579

vavuniya_court

வவுனியா மாவட்டத்தில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் மட்டும் 56 பேருக்கு நீதவான் நிதிமன்றத்தினால் சமுதாய சீர்திருத்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் கே.எம்.நஜீம் தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பான்மையாளவர்கள் கஞ்சா பாவனைக்கு அடிமையானவர்கள், மதுபோதையில் இடையூறு விழைவித்தமை, பொது இடங்களில் அநாகரிகமாக அல்லது அசிங்கமாக நடந்து கொண்டமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் அதிகமானோர் தமது திணைக்களத்தில் வைத்து வழிகாட்டப்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.

வவுனியா நீதிமன்ற வளாகத்தில் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம் கடந்த மூன்று வருடங்களாக செயற்பட்டு வருகின்றபோதும் கடந்த மாதமே அதிகமானவர்கள் 56 பேருக்கு நீதவான் நீதிமன்றம் சீர்திருத்தக் கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், இத் திணைக்களத்தினால் சமுகத்தில் குற்றம் செய்து நீதிமன்றம் வருகின்றவர்களை சீர்திருத்தக் கட்டளைக்குட்படுத்தி அவர்களுக்கும,; குடும்பத்திற்கும், நாட்டிற்கும் நற்பிரஜையாக மாற்றும் செயன்முறைகளை மேற்கொண்டு வருவதாகவும்,

இவ்வாறான கட்டளைகளுக்கு உட்படவில்லை எனில் சிறையில் அடைக்கப்படுவதன் ஊடாக தொழிலை இழந்து, குடும்பம் சீர்குலைந்து, பொருளாதாரத்தை இழந்து, பிள்ளைகளின் கல்வி இடைநடுவில் நிறுத்தப்பட்டு அவர்கள் கவனிப்பாரற்று மேலும் குற்றச் செயல்களுக்குப் பழக்கப்பட்டு நாட்டிற்கு நிதிச்சுமையை ஏற்படுத்தி இருள் மிகுந்த எதிர்காலமாக ஆக்குவதனை தவிர்க்கும் பொருட்டு இக் கட்டளை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இந்த 56 பேருக்கும் சமுதாய சீர்திருத்தக்கட்டளை இட்டு அவர்களை குற்றச் செயல்களில் இருந்து விடுதலை பெற அல்லது குற்றத்தை உணர்ந்து திருந்தவதற்கான ஒரு தற்காலிக பாதுகாப்பகவே நீதிமன்றத்தால் கட்டளை ஆக்கப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதனை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடாத்தப்படவேண்டும் என்றும் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.