இறுதிப் போட்டியிலும் இலங்கை தோல்வி : தொடரை 3-0 எனக் கைப்பற்றிய இங்கிலாந்து!!

585

England's Liam Plunkett traps Sri Lanka's Danushka Gunathilaka lbw during the Royal London One Day International Series at the SSE SWALEC Stadium, Cardiff.

இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 122 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 – 0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆரம்பத்தில் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 324 ஆட்டங்களை குவித்தது.

சிறப்பாக விளையாடிய ரூட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 105 பந்துகளில் 92 ஓட்டங்களை சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அதிகபட்சமாக சந்திமால் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனால் 5 போட்டிகளைக் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. 1வது ஒருநாள் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.