காலி – வெலிவத்தை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 19 வயது இளம் யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வசம் இருந்து 20 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர் ஹிக்கடுவை – நாரிகம பகுதியைச் சேர்ந்த, திருமணமாகாத பெண்ணொருவர் எனவும், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் எனவும், தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த யுவதியின் தாய் மற்றும் தந்தையும் ஹெரோயின் வைத்திருந்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், சந்தேகநபர், தனது தந்தையின் வற்புறுத்தலின் பெயரில் அடிக்கடி சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்று அவரிடம் கொடுப்பதாக பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






