பதவியை விட்டு ஓடமாட்டேன் : மத்தியூஸ்!!

433

Mathews

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இக்கட்டான நிலையில் உள்ள இலங்கை அணியை மேலும் சிறப்பாக செயல்பட உதவுவேன் என அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்தாவது போட்டியிலும் இலங்கை தோல்விகண்டதோடு தொடரை 3-0 என இழந்தது. டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்தது.

இந்நிலையில் இலங்கை அணியின் தொடர்ச்சியான தோல்லி தொடர்பில் கருத்து தெரிவித்த மத்தியூஸ்,

தற்போது இலங்கை அணி இக்கட்டான நிலைமையில் உள்ளது. இதனால் நான் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இதை எதிர்த்து போராடுவேன்.

எங்கள் அணியில் எனக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல நல்ல வீர்ரகள் உள்ளனர், நிச்சியமாக விரைவில் இந்த மோசமான நிலையிலிருந்து அணியை வெளிக் கொண்டு வருவேன்.

2013ம் ஆண்டு முதல் இலங்கை அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் மத்தியூஸிற்கு, இந்த ஆண்டு தொடக்கம் முதல் 20 ஒவர் அணித் தலைவர் பெறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.