ஆபாச நடனத்தை ரசித்து பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்!!

514

pakistan

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் ஆபாச நடனம் பார்த்து சிக்கியுள்ளனர். பாகிஸ்தான் அணி நேற்றிரவு சிம்பாவே புறப்பட்டது.

இந்நிலையில் அணி வீரர்களான ஜுனைத் கான், அன்வர் அலி மற்றும் அலி ஆசாத் லாகூரில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஆபாச நடனம் பார்த்தது ஜியோ நியூஸ் சனல் கமராவில் பதிவாகியுள்ளது.

தியேட்டர்களில் நடக்கும் இந்த ஷோக்களில் நடிகைகள் மேடையில் கவர்ச்சியாக ஆடுவார்கள். நேற்று இரவு சிம்பாவே புறப்படும் முன்பு தான் அவர்கள் இந்த ஆபாச நடனத்தை பார்த்து சிக்கியுள்ளனர்.

நடனம் ஆடிய ஒரு பெண் கூறுகையில் ஜுனைத் நடனத்தை பார்க்க வந்தது மிகவும் மகிழ்ச்சி. அவர் தான் எங்களில் பெரும்பாலானோருக்கு பிடித்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.