ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் நேற்றுமாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 300 மாணவிகள் தங்கியுள்ள இடத்தில் திருடன் ஒருவன்புகுந்தமை தொடர்பிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நான்கு மாடிக்கட்டிடங்களை கொண்ட இந்த தங்குமிடத்தில் புகுந்த திருடன், மாணவிகளின் 8 கையடக்க தொலைபேசிகளை களவாடி சென்றுள்ளான்.
தங்குமிடத்தின் ஜன்னல்களை உடைத்தே திருடன் உள்ளே புகுந்துள்ளான். இதன்போது அவன், மாணவிகளுக்கு தொந்தரவுகளை செய்யவில்லை
திருடனை கண்ட மாணவி ஒருவர் நடுநிசியில் திடீரென்று எழுந்த போதும் குறித்த திருடன் தப்பிச்சென்றுவிட்டான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு பெண் பாதுகாப்பு ஊழியரே பணியில் இருந்தார். எனினும் அவர் உறக்கத்தில்இருந்தமையால் அவரால் திருடனை பிடிக்கமுடியவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் தலைவர் தெரிவித்துள்ளார்.






