பக்தாத்தில் இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதல்களில் 125 பேர் பலி!!

562

Iraq

பக்தாத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மூன்று நாட்களை தேசிய துக்கதினங்களாக ஈராக் அரசு அறிவித்துள்ளது.

ஈராக் தலைநகர் பக்தாத்தில் சன நெரிசல் மிக்க வர்த்தகப் பகுதிகளில் நடத்தப்பட்ட 2 கார்குண்டுத் தாக்குதல்களில் 125 பேர் கொல்லப்பட்டனர்.

Karrada பகுதியில் வெடிமருந்துக்கள் நிரப்பப்பட்ட லொறி ஒன்று வெடிக்கச்செய்யப்பட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.

ரமழான் விடுமுறையை கொண்டாடுவதற்காக நகர்புற கடைகளிற்கு சென்றிருந்த பலர் குடும்பங்களாகவே கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் உடல்கருகி அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளதாகவும் மீட்புபணியாளர்கள் கூறுகின்றனர்.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த தாக்குதலில் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்கள் அழிவடைந்துள்ளன.

இதேவேளை மற்றுமொரு தாக்குதல் பிரசித்தி பெற்ற சந்தைத் தொகுதியொன்றில் நடத்தப்பட்டுள்ளது.