அரசியல் பிரமுகரின் மகனுக்கு 11 வயது சிறுமியுடன் திருமணம்!!

522

Marriage

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில பா.ஜனதா தலைவர் தலா மராண்டியின் மகன் முன்னா மராண்டிக்கு கடந்த 27ம் திகதி, 11 வயது சிறுமியுடன் திருமணம் நடைபெற்றது.

இதுதொடர்பான பத்திரிகை செய்திகள் அடிப்படையில், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துமாறு கோரியது. இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய் பிரகாஷ், விசாரணை நடத்தி, நீதிபதி ராஜேஷ் சின்காவிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில், பா.ஜனதா தலைவர் தலா மராண்டி, அவருடைய மகன் முன்னா மராண்டி உள்பட 3 பேர் மீது, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, வழக்கு பதிவு செய்யப்பட்டதால், தலா மராண்டி பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர்கள் ஹேமந்த் சோரன், பாபுலால் மராண்டி உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.