ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை முக்கிய அமைச்சர்கள் சிலரை சிறைக்கூண்டு ஒன்றுக்குள் வைத்துப் பூட்டியுள்ளார்.
மாத்தறை கலால் திணைக்கள அத்தியட்சகர் திணைக்களம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கலால் திணைக்களத்தினால் கைது செய்யப்படும் போதைப் பொருள் கடத்தல்காரர்களை தடுத்து வைப்பதற்கான சிறைக்கூண்டு ஒன்றும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறைக் கூண்டை திறந்து வைக்கும் நிகழ்வுக்காக அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி கூண்டுக்குள் அனுப்பி வைத்து இரும்புக் கதவையும் மூடிவிட்டார்.
சிறித்துக் கொண்டே சிறைக்குச் சென்ற அமைச்சர்களை சற்று நேரத்தில் ஜனாதிபதியே கதவை திறந்து வைத்துள்ளார்.
அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் சில்வா ஆகியோரே இவ்வாறு ஜனாதிபதியினால் சிறைக்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்டனர்.






