முல்லைத்தீவில் இன்று 94 வது கூட்டுறவாளர் தினப் போட்டிகள்!!

761

COPE

சர்வதேச கூட்டுறவாளர்களை கௌரவப்படுத்தும் முகமாகவும், எதிர்கால சந்ததியினரிடையே கூட்டுறவை வளர்க்கும் நோக்குடனும் வருடாவருடம் இக் கூட்டுறவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் முல்லை மாவட்ட கூட்டுறவு சபையினரால் 2016 ம் ஆண்டுக்கான, மாவட்ட மட்ட கலை இலக்கியப் போட்டிகள் இன்று காலை 09.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.

ஒட்டுசுட்டான், மு/கற்சிலைமடு அ.த.க பாடசாலையில்.. முல்லை மாவட்ட கூட்டுறவு சபைத் தலைவர் வீ.சர்வானந்தராசா அவர்களின் தலைமையில் இப் போட்டிகள் நடைபெறும்.

பிரதம விருந்தினராக முல்லை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு உ.சுபசிங்க அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளாக இவை அமையவுள்ளன. ஏற்கனவே முல்லை மாவட்டத்திற்குட்பட்ட கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலாக இப் போட்டிகள் நடைபெற்றிருந்தன.

கோட்ட மட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் இன்று மாவட்டமட்ட போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். கோட்ட மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் இன்று வழங்கப்படும்.

இன்று நடைபெறும் மாவட்டமட்ட போட்டிகளுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் தொடர்ந்து நடாத்தப்பட இருக்கின்ற.. ‘மாவட்டமட்ட கூட்டுறவாளர் விழாவில்’ மாணவர்களுக்கு வழங்கிக் கொரவிக்கப்படும்.

– வே.முல்லைத்தீபன்-