முல்லைத்தீவு, வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்தில் 26.06.2016 அன்று முத்தயன்கட்டு வலதுகரை பாடசாலை அதிபரும், வன்னி குறோஸ் கலாச்சாரப்பேரவையின் முல்லைமாவட்ட தலைவருமான சி.நாகேந்திரன் தலைமையில் “கவித்தென்றல் ஏரூர் எழுதிய – இரவுகள் தொலைத்த எழுத்துக்கள்” எனும் கவிதை நூல் வெளியிட்டுவிழா நடைபெற்றது.
இன் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கலந்து கொண்டு கவிதையின் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நூல் வெளியிட்டு விழாவில் பெறப்பட்ட நிதியினை வள்ளிபுனம் இனிய வாழ்வு சிறார்களின் நலனுக்காக முகாமையாளர் திருச்செல்வத்திடம் வன்னி எம்.பி சி.சிவமோகன் அவர்கள் அதனை கையளித்தார்.
இந்நிகழ்வில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கவிஞர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.










