பரிதாபமாக உயிரிழந்த பிறந்து 13 நாட்களான குழந்தை!!

661

Baby

பிறந்து பதின்மூன்று நாட்களேயான சிசுவொன்று தாய்ப்பால் குடித்து விட்டு நித்தரை கொண்ட போது திடீரென உயிர் இழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று விடியற்காலை 06.45 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. குறித்த சிசுவிற்கு சிசுவின் தாய் இரவு பால் ஊட்டி விட்டு தூங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை எழுந்து பார்த்த போது குறித்த குழந்தையின் உடற்பாகங்களில் எவ்வித அசைவுகளும் இல்லாமையால் சிசுவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் சிசுவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிசுவின் சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மரண விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.