இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் நேற்று ௦5.07.2016 செவ்வாய்கிழமை நண்பகல் பன்னிரண்டு மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ .சதா சங்கரதாஸ் சிவாசாரியார் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது .
மேற்படி மகோற்சவத்தில்
17.08.2016 ஞாயிற்றுகிழமை சப்பர திருவிழாவும்
18.08.2016 திங்கட்கிழமையன்று காலை ரதோற்சவமும்
19.08.2016 செவ்வாய்கிழமையன்று தீர்த்தோற்சவமும் இடம்பெறும் .














