உலகளவிலான மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களின் பட்டியலில் இடம்பெற்றவர் அப்பாஸ் கியரோஸ்தாமி. 1997-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த டேஸ்ட் ஆப் செர்ரி என்ற படத்திற்கு கான் விருது கிடைத்தது. ஆவணப்படங்கள் உள்ளிட்ட 40 படங்களை இயக்கியுள்ளார். ஈரான் புதிய அலை திரைப்பட இயக்குனர்களில் அப்பாஸ் கியரோஸ்தாமி முக்கியமானவர்.
அப்பாஸ் கியரோஸ்தாமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டார். சிகிச்சைக்காக அவர் பிரான்ஸின் பாரிஸ் நகருக்குச் சென்றார். அங்கு கடந்த மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்துபோனார்.