போரிடாமல் தப்பிய போராளிகளுக்கு நூதன தண்டனை வழங்கிய ஐ.எஸ்!!

264

isis

ஈராக்கில் கூட்டுப்படைகளுடன் போர் நடக்கும் பகுதியில் இருந்து தப்பி வந்த போராளிகளுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் நூதனை தண்டனை வழங்கியுள்ளனர்.ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படைகள் கடுமையாக தாக்குதல்களை தொடுத்து வருகிறது. இதனால் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த பல முக்கிய பகுதிகளும் தற்போது கூட்டுப்படைகளின் ஆதிக்கத்தில் வந்துள்ளது.கூட்டுப்படைகளின் தாக்குதலில் பல எண்ணிக்கையிலான ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிரிழந்து வந்துள்ள நிலையில் பலரும் உயிர் பிழைக்கும் நோக்கில் சண்டை நடக்கும் பகுதியில் இருந்து போரிடாமல் தப்பி வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் கடும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ள ஐ.எஸ் அமைப்பு, போரிடாமல் தப்பி வந்த போராளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கி வருகிறது.நிதி நெருக்கடி காரணமாக போராளிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் வெகுவாக குறைக்கப்பட்ட நிலையில் போர்க்களத்தில் நின்று போராடுவதை பல ஐ.எஸ் போராளிகளும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் ஈராக்கின் சலாஹ்தீன் மாகாணத்தில் உள்ள ஷர்கத் பகுதியில் போரிட்டு வந்த 7 தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த ஐ.எஸ் அமைப்பினர் பொது வீதியில் வைத்து அவர்களுக்கு நூதன தண்டனை வழங்கியுள்ளனர். அவர்களின் கை கால்களை கட்டி வைத்து கொதிக்கும் தண்ணீரில் மூழ்கடித்து உயிருடன் கொலை செய்துள்ளனர்.இதில் அந்த 7 பேரும் உடல் வெந்து இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேப்போன்று ஃபலூஜா பகுதியில் இருந்து தப்பி வந்த போராளிகள் 19 பேரை கைது செய்து பொது வீதியில் வைத்து கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.