பரா ஒலிம்பிக் வீரர் பிஸ்டோரியசுக்கு 6 வருடங்கள் சிறை : காரணம் என்ன?

383

Pistorius

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பரா ஒலிம்பிக் வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியசுக்கு ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட இவர், ஒலிம்பிக்கில் சாதாரண வீரர்களுடன் சேர்ந்து பங்கேற்ற முதல் மாற்றுத்திறனாளி வீரர் என்ற பெருமை பெற்றவர்.

புகழின் உச்சியில் இருந்த பிஸ்டோரியஸ், பிரபல மாடல் அழகி ரீவா ஸ்டீன்கேம்ப் என்பவரையே காதலித்து வந்தார்.

இந்தநிலையில், 2013ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது வீட்டில் வைத்து காதலி ஸ்டீன்கம்ப்பை துப்பாக்கியால் சுட்டு, அவர் கொலை செய்தார்.

பின்னர் வீட்டில் புகுந்தது திருடன் என்று தவறுதலாக நினைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டேன் என்று பிஸ்டோரிஸ் தெரிவித்தார்.

இந்த வழக்கில் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ததாக அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருடமாக சிறையில் இருந்த அவர் பிணையில் வெளியே வந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கக் கோரி, தென்னாபிரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது திட்டமிட்ட கொலை என்று கூறியதுடன், இதுபற்றி விசாரித்து பிஸ்டோரியசுக்கு தண்டனையை உயர்த்தி வழங்கும்படி கீழ் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து அரசியல் சாசன அமர்வில் முறையிட அவரது வழக்கறிஞர்கள் முயன்றனர். ஆனால், வழக்கை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத்து கீழ் நீதிமன்றத்தில் பிஸ்டோரியசுக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான வாதம் ஜூன் 13ம் திகதி முதல் 17ம் திகதி வரை நடைபெற்று முடிவடைந்தது.

அப்போது, பிஸ்டோரியஸ் தரப்பு சாட்சியாக வாக்குமூலம் அளித்த உளவியல் நிபுணர் ஜோனாதன். குறித்த சம்பவம் நடந்த பின்னர் பிஸ்டோரியசின் மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், அது கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமடைந்தது கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், சிறையில் இருந்தால் அவரது நிலைமை மேலும் மோசமாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த வழக்கில் பிஸ்டோரியசுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.