கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின் புத்தகப் பையில் இருந்து மதுபான போத்தல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மாணவனின் புத்தகப் பையில் இருந்த இரண்டு போத்தல்கள் கீழே விழுந்துள்ளது, பின்னர் உடனேயே பையை மூடுவதற்காக சிறுவன் முயற்சித்துள்ளான்.
இதை அவதானித்த சிறுவனின் ஆசிரியரான பிக்கு ஒருவர், உனது பையில் இரண்டு போத்தல்களா ஏன் நீ இரண்டு போத்தல் நீரை பாடசாலைக்கு எடுத்துவந்தாய் என கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்னர் போத்தல்களை நன்கு அவதானித்த பிக்கு, ஒரு போத்தலில் நீர் இருந்ததையும் மற்றைய போத்தலில் மதுபானம் இருந்ததையும் அவதானித்துள்ளார்.
குறித்த மாணவனிடம் பிக்கு விசாரணைகள் மேற்கொண்டுள்ளார், இதன் போது பதிலளித்த சிறுவன்,
தனது அப்பா நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்ட மதுபானத்தின் அரைவாசியை தான் வீட்டிலிருந்து பாடசாலைக்கு கொண்டுவந்ததாக மாணவன் குறிப்பிட்டுள்ளான்.
மேலும், பாடசாலை அதிபர் மாணவனின் பெற்றோரை அழைத்து கடுமையாக கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






