நாய்க்குட்டிக்காக தீக்குளித்த பெண்!!

476

1 (15)

நாமக்கல் மாவட்டத்தில் பெண் ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த நாயை கணவர் வெளியில் கொண்டு போய் விட்டுவிட்டால் மனமுடைந்த சாந்தி தீக்குளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சாந்தி(40) என்பவருக்கு நாய் என்றால் கொள்ளை பிரியம், இதனால் தனது வீட்டில் நாய்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார்,

ஆனால், இது இவரது கணவர் பெருமாளுக்கு பிடிக்கவில்லை, இதனால் நாயை கொண்டுபோய் எங்கேயாவது விட்டுவிடு என்று சாந்தியிடம் அடிக்கடி கூறியுள்ளார், இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டிலிருந்த நாயை எடுத்துச்சென்று வேறு எங்கேயோ விட்டு விட்டு வந்துள்ளார், இதனால் மனமுடைந்த சாந்தி மண்ணெய்யை ஊற்றி தீவைத்துள்ளார், இதில் இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெருமாள் அருகில் இருப்பவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சாந்தி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.