வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

572

Accident

ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிலொன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றிரவு (07.07.2016) 10.20 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலான்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று நடைபெற்றுள்ளது.

ஓமந்தை பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.