திருகோணமலையில் இளம்பெண் தாக்கப்பட்டு கொலை!!

500

Murder

திருகோணமலை – மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் 23 வயதான இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (08.07.2016) மதியம் இடம்பெற்றுள்ளது.

அவரது சகோதரியின் கணவராலேயே குறித்த யுவதி தாக்கப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர் பள்ளிக்குடியிருப்பு – தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.