அறநெறி பாடசாலை மாணவிகள் 3 பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரொருவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.
காலி வெலிவத்தை விஜயாநந்த விகாரையில் அறநெறி பாடசாலையில் 5 ஆம் வகுப்பில் கற்கும் மாணவிகள் 3 பேர் இன்று காலை கழிவறைக்கு சென்ற போது அங்கு மறைந்திருந்த நபரொருவர், அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளார்.
இதனை பார்த்த சில பெற்றோர் குறித்த நபரை தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர், காலி, கபுஹேம்பலவை சேர்ந்த 30 வயதான நபர் என தெரிவந்துள்ளது.
அவர் ஒரு மிதி வண்டியில் வந்து அந்த விகாரையின் பாதுகாப்பு சுவற்றில் ஏறி பாய்ந்து சென்று கழிவறையில் மறைந்திருந்துள்ளமை விசாரணையின் பின்னர் தெரியவந்துள்ளது.






