“உதவி செய்யுங்கள்” படுகொலை செய்யப்பட்ட தமிழரின் மனைவி கதறல்!!

567

Bharin Murder

பக்ரைனில் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை தமிழகம் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த உலகளந்தான்வயல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன்(வயது 38). இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இவர் கடந்த 12 ஆண்டுகளாக பக்ரைனில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு கடந்த 7ம் திகதி முதல் 10 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் 8ம் திகதி மாலை தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள சிட்டி சென்டருக்கு சென்றதுடன் மனைவிக்கும், உறவினர் ஒருவருக்கும் போன் செய்து பேசியுள்ளார்.

அன்றிரவு சாலையில் நடந்து சென்றவரை, அங்கு வந்த வங்கதேசத்தை சேர்ந்த நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் நாராயணன் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பலியானார். எதற்காக கொலை செய்தார்கள் முன்பகை ஏதும் காரணமா என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

எனவே இவரது உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.