சமாதானத்தை தேடும் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில்!!

546

Maithiri

2016ஆம் ஆண்டில் இருக்கக்கூடிய சர்வதேச நிறுவனங்களின் அறிக்கையின் படி சர்வதேசத்தின் மத்தியில் சமாதானத்திற்கு முன்னின்று தேடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனா இதனை தெரிவித்தார். மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, உள்நாட்டிலே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பல நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.

அந்நாடுகளிலே முக்கியமாக மூன்று நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. அந்த மூன்று நாடுகளின் பட்டியலில் இலங்கை இருக்கின்றது என்பதை கூறுகின்றேன்.

கடந்த காலங்களை விட தற்போது நாட்டில் சமாதனத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் பல விதமாக சேவைகளை முன்னெடுத்துள்ளோம்.

இதன் காரணமாகவே, 18ஆவது நிலைமையில் இருந்த இலங்கை சமாதனத்திற்காக இன்றைய காலகட்டத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

சர்வதேச நிறுவனங்களின் அறிக்கையின் படி, 18 நாடுகளைக் கடந்து இலங்கை இன்று முன்னிலையில் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களும், ஒரே இன மக்களாக சேர்ந்து வாழவேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.