இந்திய மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதை கண்டித்து ரஷ்ய மருமகள் நூதனப்போராட்டத்தில் களமிறங்கியுள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த ஓல்கா எபிமென்கோவா என்ற பெண் கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வந்தபோது, ஆக்ராவை சேர்ந்த விக்ராந்த் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அதன்பிறகு ஆக்ராவில் உள்ள இந்தன்புரி பகுதியில் மாமியாரோடு கூட்டுகுடித்தனம் நடத்திய ஓல்கா இந்திய மொழியை சரளமாக பேசக்கற்றுக்கொண்டார்.
இந்நிலையில், தான் இதுவரை சந்தித்திராத வரதட்சணை கொடுமையை எதிர்கொண்டுள்ளார், ஒரு கட்டத்தில் சித்ரவதை உச்சத்தை தொட்டுள்ளது, கணவன் குழந்தையுடன் ஓல்காவை வீட்டை விட்டு மாமியார் விரட்டியுள்ளார்.
இதனால் வெகுண்டெழுந்த ஓல்கா தனது மாமியார் வீட்டின் முன்பு குழந்தையுடன் அமர்ந்து உண்ணாவிரதப்போராட்டத்தை துவங்கியுள்ளார், வீட்டுக்குள் தன்னை அனுமதிக்க வேண்டும் இல்லாவிட்டால் கணவரின் சொத்தை பிரித்து தரவேண்டும் என்பதுதான் வோல்காவின் கோரிக்கையாக உள்ளது.
தான் ரஷ்ய பெண் என்பதால் புகாரினை வாங்குவற்கு பொலிசார் மறுப்பதாக வோல்கா குற்றம் சாட்டியுள்ளார்.







