சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது!!

533

arrest (1)

மகாவலி ஆற்றில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுப்பட்ட 13 பேரை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினருக்கு இன்று கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மணல் கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட 13 உழவு இயந்திரங்களை சந்தேகநபர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.