காணாமல் போன மாணவர்கள்! விசாரணைகளில் தலையிடுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவு!!

497

1 (9)
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் காணாமல் போன சம்பங்கள் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் தலையிடுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாகவும் இதுவரை சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை எனவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரை தலையிடுமாறு அறிவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, விசாரணைகளில் தலையிடுமாறு சட்டமா அதிபருக்கு பதிவு தபாலில் கடிதம் ஒன்றை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 2ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.