
அமெரிக்க டொலர் 133 மில்லியன் முதலீட்டுடன் புதிய ஹோட்டல் நிர்மாணவேலைத்திட்டம் 7 ற்காக அமெரிக்கா இலங்கையில் முதலீடு செய்துள்ளதாக இலங்கைமுதலீட்டு சபை தெரிவித்துள்ளது. சமர் சீசன், சோபியா கொழும்பு, த கோல்டன், கிரவுன் ஹோட்டல், கோல் ஹெரிடேஜ்லங்கா, மெரின் ட்ரைவ் ஹோட்டல் போன்றவையே இலங்கையில்அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தங்கள் இலங்கையின் முதலீட்டு சபையுடன்ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த ஹோட்டலிற்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் வருடங்களில்ஆரம்பிக்கப்படும் எனவும் இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையில் யுத்தத்திற்கு பின்னர் சுற்றுலா வியாபாரம் அதிகம்வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக உலக நாடுகளில் உள்ள பெரிய ஹோட்டல்நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமாகஇருப்பதாகவும் முதலீட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது.




