ஒரு நாள் மேயராக நியமனம் பெற்ற நாய்!!

314

dog-governer-seithyulgam

அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு நாள் மேயராக ‘ஃப்ரீடா’ என்ற நாய் நியமிக்கப்பட்டுள்ளது.சென் பிரான்சிஸ்கோ நகரில் ஏ.சி.சி. என்ற விலங்குகள் பராமரிப்பு மற்றும் காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நாடு முழுவதும் உள்ள ஆதரவற்ற வீட்டு விலங்குகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஏ.சி.சி. அமைப்பு இந்த வருடம் 25ஆம் ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகிறது.

இந்த நிலையில், சென் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த டீன் க்ளார்க் என்ற வீட்டு விலங்குகள் ஆர்வலர் ஏ.சி.சி. அமைப்புக்கு நிதியுதவி வழங்கினார்.இதனிடையே வீதியில் இருந்த ஆதரவற்ற நாய் ஒன்றை அவர் தத்தெடுத்து அதற்கு ‘ஃப்ரீடா’ என்று பெயர் சூட்டி ஆர்வத்துடன் வளர்த்து வருவது ஏ.சி.சி. அமைப்புக்கு தெரியவந்தது.

அது மட்டுமல்லாமல், ஃப்ரீடாவிற்கு அழகான ஆடைகளை அணிவித்தும் ஃபேஸ்புக்கில் பிரபலமடைய செய்துள்ளார். இதுதான் செல்லப் பிராணிகள் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையிலும், டீன் க்ளார்க்கின் சேவைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், ‘ஃப்ரீடா’ சென் பிரான்சிஸ்கோ நகரின் இன்றைய ஒரு நாள் மேயராக தெரிவாகியுள்ளது.

காலை முதலே ஃப்ரீடாவை புகைப்படம் எடுக்க கூட்டம் கூட்டமாக அங்கு பத்திரிகையாளர்களும் பொது மக்களும் சென் பிரான்சிஸ்கோ மேயர் அலுவலகத்துக்கு விரைந்தனர். இதனால் இன்றைய தினம் ஃப்ரீடாவிற்கான தினமாக கொண்டாடப்படுகிறது.