கட்டுப்பாட்டு விலையை விட 5 ரூபா அதிகமாக விற்க முடியுமான பொருட்கள் இவைதான்!!

410

Price

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் நேற்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கட்டுப்பாட்டு விலைகள் நேற்று (14.07.2016) முதல் அமுலுக்கு வருவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை கூறியுள்ளது.

எவ்வாறாயினும் இந்தப் பொருட்களுக்குள் குறிப்பிட்ட சிலவற்றிற்கு மாத்திரம் 05 ரூபா அதிகமாக விற்பனை செய்வதற்கு வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, சிவப்பு பருப்பு, நெத்தலி (டுபாய் மற்றும் தாய்லாந்து), கடலை, பயறு, கோதுமை மா, சீனி, காய்ந்த மிளகாய், கருவாடு (கட்டா மற்றும் சால), மாசி ஆகிய பொருட்களை கட்டுப்பாட்டு விலையையும் விட மேலும் 05 ரூபா அதிகமாக விற்பனை செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அனுமதிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிபாரசபை கூறியுள்ளது.